எங்கே நபியோ நானும் அங்கே - நபியோடு
உறவாட அருள் புரிவாயே அல்லாஹு யா அல்லாஹு
மா மதீனா நன்னபிகள் வாழும் நன்னகராம்
நானிலத்தில் சுவனம் என்னும் பொன் நகராம்
மதீனா சென்று சிலக் காலம் மன்னர் நபிகளின் சன்னிதானம்
மகிழ்வாய் நானும் வாழ்வதற்கு அருள்வாய் அல்லாஹு
மஹ்ஷரிலே மானிடர் எல்லாம் தவிக்கையிலே
மாநபிகள் லிவாவுல் ஹம்தின் நிழலினிலே
காப்போன் உந்தன் அணைப்பினிலே
கருணை நபியின் அருகினிலே
அடியேன் பாவியும் ஒதுங்கிடவே அருள்வாய் அல்லாஹு
அடிமை நான் சுவனம் செல்ல அருள் புரிவாய்
அண்ணல் நபி அரங்கினில் எனக்கோர் பணி தருவாய்
சீமான் உந்தன் அருளினிலே சுந்தரர் நபிகளின் ஹித்மத்திலே
அழியாக் காலம் இருப்பதற்கு அருள்வாய் அல்லாஹு