மணம் வீசும் ஏகன் அருளே


LYRICS


மணம் வீசும் ஏகன் அருளே
மறை தந்த நாதரே 
இறை தந்த தூதரே
கண்தேடுதே உம்மை கண்தேடுதே

அருள் ஆமினா தவப்பாலா
அன்னை கதீஜாவின் மணவாளா
ஜெகம் போற்றிடும் குணசீலா
ஜெயம் எமக்கு தந்தருள் செய்வீரா
பத்ர் யுத்தக் களத்தில் சென்று
படைகளை வென்றவர்
இறைவனை கண்டவர்
கண்தேடுதே உம்மை கண்தேடுதே

மறை போற்றிடும் மஹ்மூதா
மனங்களில் வாழும் குருநாதா
உமின் தரிசனம் கிடைக்காதா
உயர் அருள் ஆசிகள் தரும் நாதா
ஹரீசுன் அலைக்கும் என்று
திரு மறை போற்றுது
தினம் புகழ் சாற்றுது
கண்தேடுதே உம்மை கண்தேடுதே